புதுக்கோட்டை சிவபுரம் ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் கல்லூரிக்குள் பயிலும் முதுகலை மாணாக்கர்காக “கேட் ஃபீஸ்ட்” என்ற நிகழ்ச்சியில் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகள் 19.10.2022 மற்றும் 20.10.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைப்பெற்றன. இதில் மொத்தமாக 5 போட்டிகள் நடத்தப்பட்டன முதல் நாள் 19.10.2022 அன்று கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் முனைவர் எஸ்.ஜெ.சதீஷ் ஆரன் ஜோசப் தலைமையில் இனிதுடன் தொடங்கியது. இதற்கு கணிதத் துறை தலைவர் முனைவர் எஸ்.பிரியதர்ஷினி மற்றும் வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் வி.சத்ய ரேகாஇ ஆகிய இருவரும் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். முதல் போட்டியாக ஆட்ஸாப் என்ற போட்டி நடைபெற்றது இதற்கு நடுவராக வணிக நிர்வாகவியல்; துறை தலைவர் முனைவர் வி. சத்யரேகா அவர்கள் பொறுப்பேற்றார். இதில் 11 பேர் கலந்துக்கொண்டனர். அதில் முதுகலை இரண்டாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த மாணவி எம்.ஜெயபாரதி முதலிடத்திற்கும் மற்றும் இரண்டாம் இடத்திற்கு மாணவி ஏ.புவனேஸ்வரி வெற்றிப்பெற்றார்கள், இரண்டாம் போட்டியாக டம்சரட்ஸ் நடைபெற்றது இதற்கு நடுவராக ஆங்கில துறைத்தலைவர் திருமதி எஸ்.செல்வி பொறுப்பேற்றார் இதில் 09 பேர் கலந்துக்கொண்டனர். முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலத் துறையைச் சேர்ந்த மாணவிகள் டி.அடைக்கல சௌமியா மற்றும் சி.ஷர்மிளா முதல் இடத்திற்கு வெற்றிப்பெற்றார்கள் மற்றும் இரண்டாம் இடத்திற்கு முதுகலை முதலாம் ஆண்டு கணித துறையைச் சேர்ந்த மாணவிகள் ஜெ.ஜெபஸ்டினா மற்றும் வி.நர்மதா வெற்றிப்பெற்றார்கள்;. அன்று இறுதி போட்டியாக மிக்ஸ் மேட்ச் போட்டி நiபெற்றது இப்போட்டிற்க்கு கணினி பயன்பாட்டியல் துறை உதவி பேராசிரியர் ஏ.மரிய ஸ்டெல்லா நடுவராக பொறுப்பேற்றார் இப்போட்டியில் 27 பேர் கலந்துக்கொண்டனர் இதில் முதுகலை முதலாம் ஆண்டு கணித துறையைச் சேர்ந்த மாணவிகள் பி.அனுசியா மற்றும் சி.கஸ்தூரி முதல் இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்காக முதுகலை இரண்டாம் ஆண்டு வணிகப் நிர்வாகவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்.அப்துல் பாசித் மற்றும் எஸ்.நெருஞ்சி வெற்றிப்பெற்றார்கள் இப்போட்டியின் தொடர்ச்சி மறுநாள் 20.10.2022 அன்று சபிளிங் மேனியா போட்டி நடைபெற்றது இப்போட்டியின் நடுவராக உயிரி தொழில்நுட்பவியல் துறை தலைவர் முனைவர் ஜி.மணிகண்டன் அவர்கள் நடுவராக பொறுப்பேற்றார் இதில் முதுகலை இரண்டாம் ஆண்டு நிர்வாகவியல் துறையை சார்ந்த மாணவர்கள் எஸ்.அப்துல் பாசித் மற்றும் எஸ்.நெருஞ்சி முதல் இடத்தையும் மற்றும் இரண்டாம் இடத்திற்க்கு முதலாம் ஆண்டு மாணவிகள் எஸ்.தனலட்சுமி மற்றும் இ.நந்தினி வெற்றிப்பெற்றார்கள்;. அந்நாளின் இறுதியில் மாணவிகளுக்கு இடையேயான மெஹந்தி வார் போட்டி நடைபெற்றது போட்டியின் நடுவராக கணிதத்துறை தலைவர் முனைவர்.எஸ்.பிரியதர்ஷினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை சார்ந்த உதவிப் பேராசிரியர் முனைவர்.எஸ்.வாசுகி பொறுப்பேற்றார்கள் இப்போட்டியின் முதல் இடத்தை முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலத் துறையைச் சார்ந்த மாணவிகள் டி.அடைக்கல சௌமியா மற்றும் சி.ஷர்மிளா மற்றும் இரண்டாவது இடத்தினை முதுகலை இரண்டாம் ஆண்டு உயிரி தொழில்நுட்ப துறையைச் சார்ந்த மாணவிகள் யு.மஞ்சுளா மற்றும் எஸ்.கார்த்திகா வெற்றிப்பெற்றார்கள் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு 27.10.2022 அன்று கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் மற்றும் கல்லூரி முதல்வர் பரசுராமன் ஆகியோர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் முன்னதாக இப்போட்டியை கணினி பயன்பாட்டியல் துறை உதவி பேராசிரியர் மற்றும் “கேட் ஃபீஸ்ட்” ஒருகினைப்பாளர் திருமதி மா. சாருலதாஇ மற்றும் உதவி பேராசிரியர்கள் சு.மோகன் , கே.புவனேஸ்வரி ஆகியோர் இப்போட்டிகளுக்கு தேவையான அனைத்தையும் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்