புதுக்கோட்டை, ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில், 17.10.2022 அன்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) இணைந்து நடத்தும் ‘காலேஜ் பஜார்’ – மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சி துவங்கப்பட்டது. இவ்விற்பனைக் கண்காட்சி 17.10.2022 முதல் 19.10.2022 வரை மூன்று நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. முதல் நாளான இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி கவிதா ராமு, கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளை, அறங்காவலர் முனைவர் கவிதா சுப்ரமணியன், புதுக்கோட்டை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, இணை இயக்குநர் மற்றும் செயலாளர் திருமதி.பி.ஜே.ரேவதி, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் திருமயம் தாசில்தார் திருமதி.பிரவீணா ஆகியோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதா ராமு அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை துவக்கி வைத்து அங்காடிகளை பார்வை செய்து ஊக்கப்படுத்தினார். இன்று ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி கணிதவியல் துறை, இளங்கலை கணினி பயன்பாட்டியியல் துறை மற்றும் இளங்கலை உணவக மேலாண்மையியல் துறை மாணவர்கள் அங்காடிகளை பார்வை செய்து பொருட்களை பெற்று மகிழ்ந்தனர்.