ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை உணவக மேலாண்மைத்துறையின் டியூக்ஸ் அன்ட் டச்சஸ் சங்கத்தின் சார்பாக “தென்னிந்திய உணவு வகைகளின் அற்புதங்கள்” என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை நடைபெற்றது. இதில் சென்னையில் இயங்கி வரும் பிரபல கிரவுன் பிளாசா இன்டர் கான்டினன்டல் ஹோட்டலின் தென்னிந்திய சமையல் கலை நிபுணரும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவருமான திரு.சு.தர்மதேவா அவர்கள் கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு கருத்துரை வழங்கினார். அவர்தம் உரையில் தென்னிந்திய உணவுகளின் சிறப்பியல்களை விளக்கியதுடன் தென்னிந்திய உணவுகளின் வரலாற்றையும் அவை ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களில் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்பதை விரிவாக எடுத்துக்கூறினார்.
தென்னிந்திய உணவுகள் தயாரிக்கும் முறைகளையும் அவ்வாறு தயாரிக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய காரணிகளையும் விளக்கினார்.
தென்னிந்திய உணவைத் தயாரிக்கும் பல்வேறு நிபுணர்களுக்குத் தேவையான திறன்களை விளக்கியதுடன் அவர்கள் எவ்வாறு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதனை பட்டியலிட்டார்.
முன்னதாக துறைத்தலைவர் முனைவர் ளு.கார்த்திகேயன் தலைமையேற்றார். முதலாமாண்டு மாணவன் திரு.ளு.நிஷாந்த் வரவேற்க, மாணவன் திரு.P.ராம்குமார் நன்றி கூறினார்.
நிறைவாக மாணவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்து அவர்கள் தம் சந்தேகங்களை தீர்த்து வைத்தார். இதில் இத்துறையில் 35 மாணவர்களும் 3 பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.