குத்துசண்டை கருத்தரங்கு






புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் உடற்கல்வித் துறையின் மேஜர் தயான்சந்த் கழகத்தின் சார்பாக உடற்கல்வி மாணவ, மாணவியற்கான குத்துசண்டை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. புதுக்கோட்டை குத்துசண்டை பயிற்றுநர் சு.பார்த்திபன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தம் உரையில் குத்துசண்டையின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அவற்றிலுள்ள நுணுக்கங்களை படக்காட்சியின் மூலம் விளக்கி குத்துசண்டை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் கல்லூரியின் உடற்கல்வித் துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த மாணவ, மாணவியற்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் நடந்த செய்முறை பயிற்சியில், மாணவ, மாணவியர்கள் அனைவரும் அடிப்படை நுணுக்கங்கள் அனைத்தையும் செய்து பார்த்து பயன் பெற்றனர். மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கம் பெற்ற குத்துசண்டை வீரர்கள் நுணுக்கங்களை சிறப்பாக காட்சிபடுத்தினர். தொடக்கத்தில் உடற்கல்வித் துறை தலைவர் முனைவர் மு.ஜெகதீஸ் பாபு அனைவரையும் வரவேற்று குத்துசண்டை பயிற்றுநர் சு.பார்த்திபனை மாணவ, மாணவியற்கு அறிமுக படுத்தினார். உடற்கல்வித் துறை பேராசிரியர் கேத்ரின் ஜாய் செல்வகுமாரி நன்றி உரை கூறினார்.