ஜி.எஸ்.டி யை எவ்வாறு சமாளிப்பது






ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை, வணிக மேலாண்மையியல் துறை சார்பில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் “ஜி.எஸ்.டி யை எவ்வாறு சமாளிப்பது” என்ற தலைப்பில் திரு.உல.கார்த்திக், பட்டயக்கணக்காளர் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில் விற்பனைவரி, வாட் சேவை வரி, பொது சேவை வரி போன்றவற்றை விளக்கினார். வரி வசூலிப்பதின் முக்கியத்துவத்தைக் கூறினார். பொது சேவை வரி கணக்கிடும் முறை மற்றும் வரி விலக்குகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். கறுப்பு;ப பணத்தை தடுக்கும் முறைகளை எடுத்துரைத்தார்.

    இந்நிகழ்வினை வணிகமேலாண்மையியல் துறைதலைவர் முனைவர் வை.சத்தியரேகா அவர்கள் தொடங்கி வைத்தார். இரண்டாமாண்டு முதுகலை வணிக மேலாண்மையியல் மாணவி எஸ். கார்த்திகா வரவேற்றார். இரண்டாமாண்டு முதுகலை வணிக மேலாண்மையியல் மாணவி ரா.வர்ஷினி நன்றியுரை வழங்கினார்.