புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) நுண்ணுயிரியல் துறையின் “ஜென்னர் கிளப்” சார்பாக 01.09.2022 அன்று முதுகலை மாணவர்கள் இயற்கை முறையில் தயாரித்த இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூச்சி விரட்டிகளை தயாரித்து, அதனை கற்பக விநாயகா அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் அவர்களிடம் முதல் நாள் நிகழ்வாக வழங்கினர். மாணவர்கள் தயாரித்த அனைத்து தயாரிப்புகளையும் பெற்றுக் கொண்டு கல்லூரி அறங்காவலர் மற்றும் முதல்வர் மாணவர்களை வாழ்த்தி முதல் நாள் நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.
பண்டைக் காலத்தில் நமது முன்னோர்கள் இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர். அத்தகைய பாரம்பரிய மிக்க நாட்டில் இருக்கும் நாம், நமக்காகவும், நமது சந்ததியினர் நலம் காக்கவும், இயற்கை வேளாண்மையின் பக்கம் மீண்டும் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆகையால் நுண்ணுயிரியல் துறை முதுகலை மாணவர்கள் பஞ்சகாவியம், பிரமாஸ்திரா, ஜீவாமிர்தம் மற்றும் அஸ்தம கரைசல் ஆகிய இயற்கை உரங்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளை தயாரித்து இவை பயிர்களுக்கு பயன்படுத்தி வந்தால் நிலத்தில் மண்புழு எண்ணிக்கை அதிகரிக்கும் அதாவது இனப்பெருக்கம் அதிகரித்து மண்வளம் மேன்மைப்படுத்தும். இவைகளை பயிர்களுக்கு தெளிப்பதால் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பலமடங்கு அதிகரிக்கும். அனைத்து வகை மண்ணையும் சத்து நிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றன.
தயாரிப்புகள் அனைத்து பேரூட்டச்சத்துக்களும், நுண்ணுயிர் சத்துக்களும், பயிர்வளர்ச்சி ஊக்கிகளும் மிகுந்த அளவில் உள்ளன. இதனை தொடர்ந்து 02.09.2022 அன்று தேக்காட்டுர் பஞ்சாயத்தில் நமணசமுத்திரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.