புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியின் உடற்கல்வித் துறையின் சார்பாக தேசிய விளையாட்டு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுத் தின விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பேராசிரியர் முனைவா. யு.பழனிசாமி கலந்துகொண்டு மாணவர்களிடையே தேசிய விளையாட்டுதின விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். அவர் தம் உரையில் தற்போது இந்திய அளவில் விளையாட்டின் வளர்ச்சி மிகவும் வேகமாக உள்ளது என்றும் தற்போது நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் நாம் அதிக பதக்கங்களை வென்றதன் மூலம் உலக அரங்கில் நம் புகழ் உயர்ந்துள்ளது என்றார். மேலும் இந்த வெற்றியில் இளைஙர்களின் பங்கு மிகவும் கவனிக்க தக்கது என்றார்.