பல்கலை நீச்சல் போட்டியில் ஜெ.ஜெ. கல்லூரிக்கு சிறப்பிடம்






பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டிகள் மாமன்னர் கல்லூரியால் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது. இதில் பல்கலைக்கழக ஆளுமைக்கு உட்பட்ட பல்வேறு கல்லூரிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய ஊர்களிலிருந்து கலந்து கொண்டனர்.
மகளிர் பிரிவில் A.பிலோரிடா, இளநிலை மூன்றாமாண்டு வேதியியல் மாணவி 100 மீட்டர் Free Style, 100 மீட்டர் Back Stroke, 200 மீட்டர் Free Style என்று மேற்கண்ட மூன்று பிரிவிலும் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். ஒட்டுமொத்த சாம்பியன் புள்ளிகளில் ஜெ.ஜெ. கல்லூரி மகளிர் பிரிவு இரண்டாமிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.
ஆண்கள் பிரிவில் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் சார்பாக கலந்துகொண்ட D.நரேந்தர், இளநிலை மூன்றாமாண்டு கணிதவியல் என்ற மாணவர் 50 மீட்டர் Free Style-ல் முதலிடமும், 50 மீட்டர் Back Strok-ல் முதலிடமும் மற்றும் 100 மீட்டர் Free Style முறையில் இரண்டாமிடம் பிடித்து பல்கலைக்கழக அளவில் சாதனை புரிந்துள்ளார்.
அதேபோல ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில் ஜெ.ஜெ. கல்லூரி நான்காமிடத்தையும் பிடித்தது. இப்போட்டியில் வென்ற மாணவ, மாணவியரை கல்லூரி செயலர் திரு.நா.சுப்பிரமணியன், கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் உடற்கல்வித் துறைத்தலைவர் முனைவர் K.ஜெகதீஸ் பாபு, பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பாராட்டினர்.