புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித் துறையின் மேஜர் தயான்சந்த் கழகத்தின் சார்பாக உடற்கல்வித்துறை மாணவர்களுக்கு உடற்கல்வித்துறையின் இன்றைய வேலைவாய்ப்பு குறித்த சிறப்பு விரிவுரை 13.07.2023 அன்று நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, மாமன்னர் கல்லூரி, உடற்கல்வி துறை உதவிப்பேராசிரியர் முனைவர் K.ஜான் போஸ்கோ கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஒளித்திரையின் வாயிலாக உடற்கல்வித்துறையின் இன்றைய வேலைவாய்ப்பு பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்.
உடல் வலிமை, மன அழுத்தத்தை குறைத்தல், உடலை எவ்வாறு புத்துணர்ச்சி பெறச்செய்தல், உடல் எடையை குறைத்தல் போன்றவற்றை தெளிவாக எடுத்துரைத்தார். பின்னர் மாணவர்களுக்கு எளிமையான முறையில் உடற்பயிற்சிக்கான வகுப்புகளை நடத்தினார். மேலும் உடற்கல்வியால் ஏற்படும் பயன்களை உடற்கல்வித்துறை மாணவர்களாகிய நீங்கள் மற்றவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினார்.
இறுதியில் மாணவர்கள் உடற்கல்வித்துறையின் வேலைவாய்ப்பை பற்றிய தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்தனர். முன்னதாக துவக்க விழாவில் உடற்கல்வித்துறைத் தலைவர் முனைவர் K.ஜெகதீஸ் பாபு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். முன்னதாக உதவிப்பேராசிரியர் சத்யா காந்தி அனைவரையும் வரவேற்றார்.
நிறைவாக உடற்கல்வித்துறை உதவிபேராசிரியர் திருமதி கேத்தரின் ஜாய் செல்வக்குமார் நன்றியுரை வழங்கினார்.