புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையும், தமிழ்த்துறையும் இணைந்து சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 21.06.2023 அன்று மேலதேமுத்தம்பட்டி பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் யோகா பயிற்சி முகாமை நடத்தியது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி முகாமை தலைமையேற்று நடத்திட கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ளு.அடைக்கலவன் வரவேற்பு கூறினார். தொடர்ந்து தமிழ்த்துறைத் தலைவரும் இளையோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளருமான முனைவர் மு.தயாநிதி மாணவ மாணவியர்களுக்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியில் 57 மாணவ மாணவியர் பங்குபெற்றனர். அவர்களுக்கு உடல்தூய்மை, உடல் ஆரோக்கியம் பற்றியும் சர்வதேச யோகாதினம் குறித்த காரணமும் நோக்கமும் குறித்து விளக்கப்பட்டன. மேலும், தடா ஆசனம், விருட்சக ஆசனம், குரிசி ஆசனம் போன்ற எளிய ஆசனங்களும் மூச்சுப்பயிற்சி குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டன. அதில் மாணாக்கர் அனைவரும் ஆர்வமுடன் ஈடுபட்டனர். நிறைவாக, பள்ளியின் ஆசிரியை நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வணிகவியல் துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் டு.லியோ பிராங்ளின் செய்திருந்தார்.