புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), நலப்பணித்திட்டம் புதுக்கோட்டை விதை கலாம் அறக்கட்டளையும் இணைந்து மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் மேதகு A.P.J. அப்துல்கலாம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (27.07.2022) மரக்கன்று நடுவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு ஜெ.ஜெ. கல்வி குழுமச் செயலர் திரு. நா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து அதன் பயன்கள் குறித்தும் பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் தலைமை வகித்தார். முன்னதாக திட்ட அலுவலர் இரா.மணிமாறன் வரவேற்க முனைவர் சி.முத்துக்குமார் நன்றியுரை கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலகர்கள் முனைவர் கி.கோவிந்தன், முனைவர் மா.ஆறுமுகம், முனைவர் பி.பிரியதர்ஷிணி செய்திருந்தனர். இதில் நாட்டுநலப்பணித் திட்ட தன்னார்வலர்களும் விதை கலாம் அறக்கட்டளையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.