புறப்பரப்பு வேதியியல்






புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), வேதியியல் துறை, ரெசனான்ஸ் சங்கம் சார்பில் 22.07.2022 அன்று புறப்பரப்பு வேதியியல் என்னும் தலைப்பில் சிறப்பு விரிவுரை நடைபெற்றது. இதில் முனைவர் A.ஜாபர் அகமது, இணைப்பேராசிரியர், வேதியியல் துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி சிறப்பு விரிவுரையாளராக பங்கேற்றார்.

அவர் தம் உரையில் புறப்பரப்பு வேதியியலின் அடிப்படைக் கருத்துக்களை புறப்பரப்புகளும் பொருள், பரப்புகளும் கவரப்படும் உறிஞ்சுதல் பற்றித் தெளிவாகக் கூறினார். புறப்பரப்பு வேதியியலின் வகைகளை இயற்பு மற்றும் வேதிப் புறப்பரப்பு கவருதல் பற்றி தகுந்த உதாரணங்களுடன் விளக்கினார். மேலும் புறப்பரப்பு கவருதலின்போது எவ்வாறு ஒரு திடப்பொருளின் மேற்பரப்பில் பொருளான அதன் ஈர்ப்பு விசையின் மூலம் ஒட்டிக் கொள்கின்றன என்பதனை தெளிவாகக் கூறினார். இயற்பு மற்றும் வேதிப்புரப்பு கவர்தலை வேறுபடுத்தி அதன் முக்கியத்துவத்தை தெளிவாகக் கூறினார். இயற்பு புறப்பரப்பு என்பது புறப்பரப்பு கவரும் பொருள் மற்றும் கவரப்படும் பொருளானது உலைக்குறைந்த ஈர்ப்புவிசைகளை வாண்டர்வால்ஸ் பினைப்பு மூலம் உருவாகிறது வேதிப்பு புறப்பரப்பு கவருதல் என்பது வலிமை மிகுந்த பிணைப்பு மூலம் ஒட்டிக் கொள்கிறது என்று தெளிவாக கூறினார்.

லாங்மியுர் மற்றும் பிரென்விச் புறப்பரப்பு உறிஞ்சுதல் ஆகியவற்றுள் அடிப்படைக் கருத்துகள், செயல்முறை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றித் தெளிவாகக் கூறினார்.

புறப்பரப்பு வேதியியலில,; ஒரு திடப்பொருள், திரவம் மற்றும் வாயு மூலக்கூறுகளுடன் எவ்வாறு ஒட்டிக் கொள்கிறது என்று உதாரணங்களுடன் விளக்கினார்.

புறப்பரப்பு வேதியிலான் முக்கிய பயன்களான கடல் நீரில் உப்பை எவ்வாறு பரப்பு உறிஞ்சுதல் மூலமாக நன்னீராக மாற்றலாம் என்றும், தொழிற்சாலை பயன்பாடுகளான ஒளியினையூக்கி, மின்னார் வினையூக்கி, ஒளிவேதி வினையூக்கிகளின்; செயல்பாடு, பண்பு மற்றும் அதன் பயன்பாடுகளை பற்றி தெளிவாக கூறினார்.

வினையூக்கி என்பது ஒருவேதிவினை நிகழும்போது அதன் வினைவேகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொருள் என்றும், வினைபடு பொருள் மற்றும் விளைவினை பொருளின் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றுத் தெளிவாகக் கூறினார். வினையூக்கிகளின் வகைகளை நேர்மறை மற்றும் எதிர்மறை வினையூக்கிகளாய் செயல் மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றியும், வினைவேக ஊக்கிகளை தகுந்த உதாரணங்களுடன் விளக்கினார். வினையூக்கிகளை வில்கின்சன், சிக்ளார் நாட்டா, ரானே நிக்கல் ஆகியவற்றின் பகுதிப்பொருள் செயல்படும் முறை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றித் தெளிவாகக் கூறினார்.

இறுதியாக அவர்தம் உரையில் புறப்பரப்பு வேதியிலாவது நம் அன்றாட வாழ்வியலில் எவ்வாறு இணைந்துள்ளன என்பதையும், எதிர்காலத்தில் புறப்பரப்பு வேதியலில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளைப் பற்றியும் அதன் பயன்பாடுகள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது என்றுத் தெளிவாகக் கூறினார்.

நிகழ்ச்சியில் வேதியியல் துறை தலைவர் முனைவர் சி.முத்துக்குமார் தலைமை தாங்கினார். இளநிலை மூன்றாம் ஆண்டு மாணாக்கர்களான A.பாலமுருகன் வரவேற்புரையும், P.தீபிகா நன்றியுரையும் ஆற்றினர்.