திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் ஆ.செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் யூத் ரெட் கிராஸ்; மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் K.வெற்றிவேல் அவர்கள் வழிகாட்டுதலின் படியும் புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் மற்றும் கடியாபட்டி ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து 22.07.2022 அன்று இரத்ததான முகாம் நடத்தியது.
இரத்ததான முகாமை முனைவர் கற்பக விநாயாகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் துவங்கி வைக்க, கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் மாணவர்களை வாழ்த்தினார். முகாமைப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் இரத்த வங்கி அலுவலர் டாக்டர்.A.கிஷோர் குமார் மற்றும் கடியாபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் டாக்டர்.S.ரகுவரன் ஆகிய இருவரின் தலைமையில் அவர்களது மருத்துவ பணியாளர்கள் மேற்கொண்டனர்.
இம்முகாமில் 65 மாணவ, மாணவிகள் இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் புதுக்கோட்டை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் முனைவர் கு.தயாநிதி செய்தார்.