புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), நுண்ணுயிரியல் துறையின் ஜென்னர் கிளப் சார்பாக சிறப்பு விரிவுரை நடைபெற்றது. விரிவுரைக்கு கிராம நிர்வாக அலுவலர் A.ஈடித் ரேனா அவர்கள் கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு “போட்டித் தேர்வுக்கான தயாரிப்பு ஒத்தி” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல் கலாம் ஐயா அவர்கள் கூறியப்படி “கனவு காணுங்கள்” – அதே கனவு மெய்ப்பட வேண்டுமென்றால் “உலகின் மிக அழகிய சொல், செயல்” ஆகவே ஸ்மார்ட் ஆக செயல்பட வேண்டும் என்று தன் உரையைத் தொடங்கினார்.
அவர்தம் உரையில் TNPSC, SSC, வங்கிப்பணி உள்ளிட்ட போட்டித்தேர்வுக்கு தயாராவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் அதற்கு ஈடாக மத்திய, மாநில அரசு துறைகளில் வேலைவாய்ப்புகளுகளும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுத் துறைகளில் SSC, RRB, UPSC மூலம் மட்டும், சுமார் 1 லட்சத்து 34 ஆயிரம் காலியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படும் என அறிவிக்கப்படுகிறது. இதே போல், தமிழக அரசு துறைகளிலும் டி.ஆர்.பி.டி.என்.பி.எஸ்சி மூலம் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, மாணவர்கள் தாங்கள் எவ்வாறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராக்குவது என்பதில் நீங்கள் 1. உங்கள் ஆர்வத்ததைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப பாடத்தையும் பணித் துறையையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். 2. தேர்வு முறையைப் புரிந்து கொள்ளுங்கள். 3. ஒரு நல்ல உத்தியை உருவாக்கிக் கொள்ளவும். 4. இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். 5. குறிப்புகளை உருவாக்கனும். 6. டிஜிட்டல் கற்றல் மிகவும் இன்றியமையாதது.
அதே சமயம் பொதுவாக அதிகாலை படிப்பது சிறந்தது என்பது பெரும்பாலானோர் கூறுகின்றன. ஆனால், உண்மையில் படிப்பதற்கு ஏற்ற நேரம் என்பது, ஒவ்வொருவருடைய மனநிலை, அவர்கள் படிக்கும் விதத்தைப் பொறுத்தும் அமைகிறது. சிலருக்கு இரவு நேரங்களில் படிப்பது தான் பிடிக்கும். அப்போது படித்தால் தான் ஞாபகம் இருக்கும் என்று எண்ணுவார்கள்.
இன்னும் சிலருக்கு காலை முதல் மதியம் வரையில் படிப்பதற்கு வசதியாக இருக்கும் மதிய வேளைக்குப் பிறகு தூக்கம் வந்துவிடும். எனவே, அதற்குள்ளாக படித்து முடிப்பர் சிலர் மத்திய உணவுக்குப் பின் குட்டித் தூக்கம் போட்டுவிட்டு, படிப்பர். மாலை முதல் இரவு வரையில் அட்டவணை போட்டு படிப்பர். எனவே, படிப்பதற்கான நேரம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தும் அமைகிறது என்று கூறினார்.
பொதுவாக காலையில் 4மணிக்கு எழுந்து, 5மணிக்குள்ளாக படிக்கத் தொடங்க வேண்டும். அந்த நாள் முழுவதும் படித்தவற்றை மனதில் திரும்ப திரும்ப சொல்லிப் பார்க்க வேண்டும். குறிப்பாக ஏதோ படிக்கிறோம் என்று அலட்டிக்கொள்ளாமல், நல்ல கவனத்துடன், ஆர்வத்துடன் படிக்க வேண்டும். அதிகாலை நேரங்களில் அறிவியல், சமூக அறிவியல், பொது அறிவு பாடங்களைப் படிக்கலாம். குறிப்பாக மொழி பாடங்களை படித்தால் நன்றாக நினைவில் நிற்கும். அறிவியலில் கணிதம் நமபந்தப்பட்ட பிரிவுகளை தவிர்த்து மற்றவற்றை படிக்கலாம்.
வரலாறு பாடங்களை படிக்கும் போது, காலக்கோடு (Time Line), ஆண்டுகள், சிறப்புகள் போன்றவற்றை மனதில் திரைப்படம் போன்று ஓடவிட்டு படிக்க வேண்டும். படித்த பின்பு, மீண்டும் ஒருமுறை வாசித்துக் கொள்ளவும். கணிதம், அறிவியல் பாடங்கள்: கணிதம், அறிவியல் கடினமான பகுதி போன்றவற்றை மாலை முதல் இரவு வரையில் படிக்கலாம். குறிப்பாக கணித பாடத்தை புரிந்து, படிக்கும் போது ஆர்வக்கோளாறு காரணமாக அதிக நேர விரயம் எடுத்துக்கொள்ளும்.
எனவே, சூத்திரங்கள், கணித வழிமுறை போன்றவற்றுக்கு அதிக நேரங்கொடுக்காமல், குறைந்து நேரத்தில், தீர்வு காண்பதற்கு பழகிக்கொள்ளுங்கள். முந்தைய போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு குறைந்த நேரத்தில் தீர்வு கொண்டு வர பயிற்சி செய்யுங்கள்.
கணிதத்தில் ஒரு கேள்விக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டால், அதைத் தொடர்ந்து வரும் எளிமையான தெரிந்த கேள்விக்கு, நேரம் இல்லாமல், பதற்றத்தில் தவறாக பதிலளிக்க நேரிடும். எனவே கணித பாடத்தைப் பொறுத்த வரையில், அதிக பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்தம் உரையில் கூறினார்.
மக்களும் கேட்கிறார்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறாததற்கு மற்றொரு முக்கிய காரணம், அதிக கவனச்சிதறல்கள் இருப்பதுதான் இலக்குகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மாணவர்கள் பெரும்பாலும் வெற்றிக் கதைகளால் ஈர்க்கப்படுகிறார்கள்ஃ அவர்கள் மற்றவர்களின் வெற்றியைப் பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்க அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் மற்றும் அவர்களின் தயாரிப்புகளில் நேரத்தை செலவிட மாட்டார்கள்.
நிகழ்ச்சிக்கு நுண்ணுயிரியல்துறை தலைவரும், கல்லூரி ஒருங்கிணைப்பாளருமான முனைவர் பா.ஜீவன் தலைமை தாங்க இளங்கலை மற்றும் முதுநிலை மாணாக்கர்கள் சிறப்பு விரிவுரையில் கலந்து கொண்டனர். நுண்ணுயிரியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் மா.பூர்ணிமா வரவேற்க, இளநிலை மூன்றாமாண்டு மாணவி மு.சிந்து உதவி நன்றியுரையாற்றினார்.