நிறுவனர் கோப்பை இறகுபந்தாட்ட போட்டிகள்






புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் 13 மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இறகுப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியற்கள் அறந்தாங்கி, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி, பொன்னமராவதி, தஞ்சாவூர் போன்ற நகரங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளை ஜெ.ஜெ. கல்லூரி செயலர் திரு.நா.சுப்பிரமணியன், முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

13 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியற்கு இரட்டையர்க்கான போட்டியும் நடைபெற்றது.

13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் முதலிடம் S.P.வசந்த, இரண்டாமிடம் M.மாரி ஹரிநிவாஸ், மூன்றாமிடம் S.V.முகுந்தன், நான்காமிடம் M.அசரர் ஹீசன் ஆகியோர் பெற்றனர். நால்வரும் மதுரா பேட்மிண்டன் அகாடமி, புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள். 13 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் (ஒற்றையர்) முதலிடம் R.D..திவ்யா, இரண்டாமிடம் M.L.தியா, மதுரா பேட்மிண்டன் அகாடமி, புதுக்கோட்டை, மூன்றாமிடம் S.ஹரினி, காஸ்மோ கிளப், நான்காமிடம் G.பிரீத்தி, கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை.

15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் (இரட்டையர்கள்)

முதலிடம்: A.தௌபிக் மற்றும் ஆ.ராகுல்

இரண்டாமிடம்: V.சிவசங்கர் மற்றும் திலீப்பன்

மூன்றாமிடம்: S.தக்சில்ராஜ் மற்றும் S.P.வசந்த்

ஆகிய மூன்று இடங்களும் மதுரா பேட்மிண்டன் அகாடமி.

நான்காமிடம் G.நிதிஷ்குமார் மற்றும் M.ராஜ் கௌதம், கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை.

15 யதுக்கு உட்பட்ட மாணவிகள் (இரட்டையர்)

முதலிடம்: M.பத்மவர்சினி மற்றும் N.கிருத்திகா

இரண்டாமிடம்: L.V.சுவேதா மற்றும் M.மதுமிதா

மூன்றாமிடம்: M.L.தியா மற்றும் R.D.திவ்யா

ஆகிய மூன்று இடங்களும் மதுரா பேட்மிண்டன் அகாடமி மாணவர்கள் நான்காமிடம்: K.நிஷாந்தினி மற்றும் L.ரிசோலி, காஸ்மோ கிளப், புதுக்கோட்டை

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், M.குணசேகரன் அவர்கள் பரிசு வழங்கி மாணவ, மாணவியரை பாராட்டினார்.

போட்டிக்கான ஏற்பாட்டை உடற்கல்வித்துறை சார்பாக செய்யப்பட்டிருந்தது.