சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்






புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்ட சார்பாக காவல் உதவி செயலி மற்றும் சைபர் க்ரைம்; குறித்த விழிப்புணர்வுபு கருத்தரங்கம் 12.07.2022 அன்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் தலைமையேற்றார்.

சைபர் க்ரைம் காவலர் ஆய்வாளர் திருமதி M. கவிதா மற்றும் சைபர் க்ரைம் காவலர் உதவி ஆய்வாளர் திரு. P. இளமாறன் ஆகியோர் கலந்த கொண்டு சைபர் க்ரைம் குற்றங்கள் எல்லாம் எவ்வாறெல்லாம் நடக்கின்றது அவற்றை எவ்வாறெல்லாம் விழிப்போடு இருந்து தடுக்க முடியும் என்பது குறித்து கருத்துரை வழங்கினார்கள். மேலும் காவலன் செயலி எவ்வாறு தரவிறக்கம் செய்வது அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து விளக்கினர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் காவலன் செயலியை தங்களது கைபேசியில் தரவிறக்கம் செய்தனர். இது குறித்து தாங்களுக்கு ஏற்பட்ட ஐயங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். முன்னதாக திட்ட அலுவலர் முனைவர் மணிமாறன் வரவேற்க திட்ட அலுவலர் முனைவர் முத்துக்குமார் நன்றியுரை கூறினார். கருத்தரங்கு ஏற்பாட்டினை முனைவர் ஆறுமுகம், முனைவர் கோவிந்தன், திருமதி பிரியதர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர்.