புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் 10.03.2021 அன்று மகளிர்தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பெற்றது. விழாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டனர். கற்பக விநாயகா மேலாண்மையியல் நிறுவனத்தின் (KIM) இயக்குநர் முனைவர் பா.அனிதாராணி வரவேற்புரை வழங்கினார். கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் தலைமையுரை ஆற்றினார். அவர் தம் தலைமையுரையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணத்தையும், பெண்களை போற்றுகின்ற குடும்பங்கள் தான் நல்வழியில் செயல்படுகின்றன. எங்கு பெண்களை மதிப்புடன் நடத்துகின்றார்களோ அங்கு அனைத்து செயல்பாடுகளும் மேலோங்கி நிற்கும் ஒவ்வொருவர் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பவர் பெற்றோர்கள். பெற்றோர்களை மதிக்கின்ற பிள்ளைகள் நம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் இருந்தால் தம் வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறலாம் என்று கூறினர். மாணவர்களாக இருப்பவர்கள் எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும,; எவற்றையெல்லாம் தேவையற்றதாகக் கருதி விளகியிருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்கள். புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி N. உமாராணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். அவர் பேசுகையில் ஆசைதான் ஒரு மனிதனின் அழிவிற்;குக் காரணமாகஅமைந்து விடுகிறது எனவும் அறிவியல் சாதனங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது நன்மை பயக்குவதாகவும் அதுவே சில சமயங்களில் அழிவிற்குக் காரணமாக அமைந்து விடுகிறது எனவும், தன் பணி அனுபவங்களை உணர்ச்சி பூர்வமாக எடுத்துக்கூறி பெண்பிள்ளைகள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்கள். இன்றைய சமூகச்சூழலில் பெண் இனத்தைக் காப்பது பெரும் சவாலகவே அமைகிறது என்பதையும் கடமையைச் சரியாகச் செய்கின்ற பெண்கள் தங்களைப் பாதுகாத்து கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும். கடமையை சரியாகச் செய்பவர்கள் பெண்கள் என்பதால் கற்பை சுமக்கும் தன்மையை பெண்களுக்கு படைத்திருப்பதாகக் கூறினார். மேலும் தம் அனுபவ நிகழ்வுகளை எடுத்துக் கூறி பெண்பிள்ளைகள் எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்கள். மகளிர்தின விழா தொடர்பாக நடத்தப்பெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் சிறப்பு விருந்தினரால் பரிசுகள் வழங்கப்பெற்றன. ஜெ.ஜெ கல்வியியல் கல்லூரி துணை முதல்வர் திருமதி அழகுலதா அவர்கள் போராட்டம் புரட்சி குணம் அல்ல மகளிர் தினம் கொண்டாடப்படுவதின் அவசியம் பெண்களின் உரிமையை பெண்கள் எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். கற்பக விநாயகா செவிலியர் கல்லூரியின் முதல்வர் திருமதி சுமித்ரா அவர்கள் பெண்களின் ஆரோக்கியம் தேசத்தின் நலம் என்றும் தாய்மைப்பண்பு சிறப்பு பற்றியும் பெண் இன பெருமை பற்றியும் எடுத்துரைத்தார்கள். கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் நு.ஷானு ரேஷ்வான்; அவர்கள் ஆணும் பெண்ணும் சமம் என்பதை பாரதியார் வரிகளோடு எடுத்துரைத்தார்கள். அதன்பின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் நிறைவாக மகளிர் மேம்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ரத்னாதேவி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.