இசை விழிப்புணர்வு கருத்தரங்கம்






புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையின் கலை அருவி இலக்கியப் பேரவைச் சார்பாக 09.01.2023 அன்று “பாட்டாலே புத்தி சொன்னார்” என்ற தலைப்பில் இசை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர் சரபோஜி அரசுக் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் S.சத்ய மூர்த்தி அவர்கள் இசைக் கருத்துரை வழங்கினார்.

அவர்தம் கருத்துரையில் எதனையும், யாரிடமும் கொண்டு செல்ல இசையே எளிதில் இயலும். பாட்டுத் திறத்தாலே இந்த வையகத்தையும் பாலித்திட வேண்டும் என்று பாரதியும் கூறியது அதனாலே. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்பது நம்முன்னோர் வழக்கானாலும், நம் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். புதுமை வேண்டாம் என்பது அல்ல. பழமையைக் காத்து பண்பாட்டு அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டே இருக்கிறோம். துரித உணவு என்ற பாதையில் துரித மரணத்தை நோக்கி பயனிக்கிறோம்.

மாணவர்கள் இதனைச் சிந்திக்க வேண்டும். நேற்றைய வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமல் எதிர்காலத்தைச் சிறப்பாக அமைக்க இயலாது என்று எல்லா கருத்துகளையும் நாட்டுப்புற இசையின் வழியாகவே கூறினார். நிகழ்ச்சிக்கு துறைத்தலைவர் முனைவர் கு.தயாநிதி தலைமையுரை ஆற்ற, துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இரா.லதா வரவேற்றார். நிறைவாக உதவிப்பேராசிரியர் திருமதி லெ.அஞ்சலை நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியினை மூன்றாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி அட்சயா தொகுத்து வழங்கினார். அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.