முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏழை மாணவிக்கு உதவிய கல்லூரி மாணவன்.
புதுக்கோட்டை ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி), உயிர் தொழில்நுட்பவியல் துறை முன்னாள் மாணவர்கள் கூட்டம் 09.01.2023 இன்று நடைபெற்றது. இதில் 60 முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இதில் துறை தலைவர் திரு G. மணிகண்டன் வரவேற்புரையில் முன்னாள் மாணவர் சங்கமானது இந்நாள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் மேல்படிப்பு சம்பந்தமான உதவிகளை புரிய வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் திரு.சரஸ்தீபன் இளங்கலை தொழில்நுட்பவியல் துறை சார்ந்த மூன்றாம் ஆண்டு மாணவிக்கு படிப்பு செலவிற்காக ரூபாய் பத்தாயிரம் ரொக்கமாக கொடுத்து உதவினார். இதனை கல்லூரியின் அறங்காவலர் திருமதி.கவிதா சுப்பிரமணியன், முதல்வர் டாக்டர்.ஜெ. பரசுராமன் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.