Blood Donation Camp






பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் K.வெற்றிவேல் அவர்களின் ஆலோசனைப் படியும் புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் (06.01.2023) அன்று நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் K.வெற்றிவேல் முகாமைத் தொடங்கி வைத்து ரத்ததானம் செய்த தொண்டர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் தலைமையேற்க யூத் ரெட் கிராஸ் தொண்டார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு.தயாநிதியும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களும் செய்திருந்தனர். இந்த முகாமில் 74 யூனிட் இரத்ததானம் செய்யப்பட்டது.

முகாமினை புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரத்தவங்கி அலுவலர் Dr. A.கிஷோர் மற்றும் அவரது மருத்துவக்குழுவினர் நடத்திக் கொடுத்தனர்.