குத்துச்சண்டை போட்டி






பல்கலைக்கழக ஆளுமைக்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர் மாயவரம், பெரம்பலூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளிலுள்ள 22-க்கும் மேற்பட்ட கல்லூரி அணியினர் பங்குபெற்றனர்.

இதில் பங்கேற்ற புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி பெண்கள் குத்துச்சண்டை அணியினர் பல்வேறு எடை பிரிவுகளில் 4 தங்கம்,1 வெள்ளி, 1 வெண்கலம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.

கல்லூரி குத்துச்சண்டை மகளிர் அணியினர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் பிடித்த மாணவிகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பாக அகில இந்திய பல்கலைக்கழக போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிகளில் வென்ற கல்லூரி பெண்கள் குத்துச்சண்டை அணியினரை கல்லூரி செயலர் திரு.நா.சுப்பிரமணியன், கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன், முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன், உடற்கல்வித்துறை தலைவர், பயிற்றுநர் சு.பார்த்திபன் ஆகியோர் பாராட்டினர்.