Basket Ball Inter-Collegiate






பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுமைக்கு உட்பட்ட திருச்சி, கும்பகோணம் தஞ்சாவூர் நகரங்களிலுள்ள 8 கல்லூரிகள் பங்குபெறுகின்றன. நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெறும் இப்போட்டியில் திருச்சி புனிதவளனார் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, நேஷனல் கல்லூரி மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி ஆகியவை லீக் போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்போட்டியினை கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன், உடற்கல்வித்துறை தலைவர் முனைவர் K.ஜெகதீஸ் பாபு, பல்கலைக்கழக ஆண்கள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.