பல்கலை ஆடவர் பேட்மிட்டன் புதுகை ஜெ.ஜெ. கல்லூரி சாம்பியன்






பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் பேட்மிட்டன் போட்டிகள் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் 03.11.2022 மற்றும் 04.11.2022 இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக ஆளுமைக்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டடிணம், அரியலூர் கும்பகோணம், மாயவரம், கரூர் போன்ற கல்லூரி அணியினர் பங்கேற்றனர்.

கடந்த வருட சாம்பியன் ஜெ.ஜெ. கல்லூரி அணியினர். முதல் போட்டியில் திருச்சி நேஷனல் கல்லூரி அணியினரை வென்றனர். பின்னர் தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி அணியினரை வென்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். அரையிறுதி போட்டியில் EGS பிள்ளை கல்லூரி, நாகப்பட்டிணம் அணியினரை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதிபோட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியினரை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தனர். இப்போட்டியின் மூலம் தகுதிவாய்ந்த வீரர்கள் தேர்வு நடைபெற்று அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையோன போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பாக பங்கேற்பர்.

போட்டியில் வென்ற மாணவர்களை கல்லூரி செயலர் திரு. நா.சுப்பிரமணியன், முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன், உடற்கல்வித்துறை தலைவர் முனைவர் K.ஜெகதீஸ் பாபு மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவியர் பாராட்டினர்.