Yogic Breathing






புதுக்கோட்டைஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) உடற்கல்வி உடல்நலக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை சார்பாக 29.11.2021 அன்று பிரணாயாமம் பற்றிஒருநாள் பன்னாட்டுக்கருத்தரங்கம்நடைபெற்றது.

கருத்தரங்கில் அமெரிக்காவின் தெற்கு கரோலினாமருத்துவப் பல்கலைக்கழக புற்றுநோய் கதிர்வீச்சுத் துறைப் பேராசிரியர் முனைவர் சுந்தர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். அவர்தம் உரையில் மூச்சு பயிற்சி என்பது உடலை மட்டும் பேணி பாதுகாப்பதோடு அல்லாமல் ஆன்மாவையும் வளப்படுத்துகிறது. மூச்சு பயிற்சிக்கான முறைகள் நம் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளது என்பதை அறிவியல் முறையில் ஆய்வு செய்து அதன் உண்மைத்தன்மையை மேலை நாடுகளுக்குஎடுத்துச் சென்றதினை விவரித்தார் .

மேலும், புற்று நோயாளிகளுக்கு கதிர்வீச்சு என்ற நவீன முறையிலேமட்டுமே குணப்படுத்துகின்றபோது மனதளவில் அவர்கள் பாதிக்கப்பட்டு தன் வாழ்நாள் குறையும் என்ற எண்ணத்தை போக்க மூச்சு பயிற்சியின் வழி அவர்களின் மனநிலை மாற்றமடைவதை மாணவர்களுக்கு விளக்கினார். .மூச்சு திணறல் வறட்டு இருமல் போற்றவற்றிற்கான தீர்வுகளை மாணாக்கர்கள் வினாக்களாக எழுப்பியபோது அதனைப் பயிற்சியின் வழியாக விளக்கினார். அதனைத் தன்னுடைய சொந்த அனுபவத்தின் வழி இதனை அறியமுடிந்தது என்று கூறினார்.

முன்னதாக உடற்கல்வி உடல்நலக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறைத் தலைவர் முனைவர் ஜெகதீஸ்பாபுவரவேற்க தமிழ்த்துறைத்தலவர் முனைவர் .தயாநிதி நன்றிகூறினார்