ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), வேதியியல் துறையின் “ரெசனான்ஸ் சங்கம்” சார்பில் 24.11.2021 அன்று நடைபெற்ற சிறப்பு விரிவுரையில், பூண்டி புஷ்பம் கல்லூரி வேதியியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் V.திருமுருகன் “அகச்சிவப்பு நிறமாலையும், அவற்றின் பயன்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அகச்சிவப்பு கதிர்கள் என்பது அதிக அலைநீளம் கொண்ட மின்காந்த அலையாகும். அலைநீளம் அதிகம் என்பதால் இக்கதிர்கள் கண்களுக்கு புலப்படுவதில்லை. ஒளியலைகளின் அலைநீளம் குறைவு என்பதால் ஒளி கண்களுக்குப் புலனாகிறது. வெள்ளொளியான சூரிய ஒளி ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற ஏழு நிறங்களைக் கொண்டது. இவற்றின் அலைநீளமானது 2500 முதல் 16000 nm ஆகும். மனித கண்களால் இவைகளைக் காண இயலாது. இதனைக் கண்டறிந்தவர் (1800) சர் வில்லியம் ஹெட்சல். தன் ஆய்வின் போது ஒருமுறை இருண்ட அறையில் ஒளியை உள்ளே செலுத்தி பிரிசத்தை பயன்படுத்தி ஏழுநிறங்களாக பிரித்து அதன் வெப்பநிலையை பரிசோதித்தார். இதில் நீல நிறத்திலிருந்து சிவப்பு நிறம் வரை செல்லும் போது வெப்பநிலை, கூடுவதுடன் சிவப்பு நிறத்திற்கு அருகில் கண்ணுக்கு தெரியாத மின்காந்த கதிர்கள் மூலம் அதிக வெப்பம் ஏற்படுவதை கண்டறிந்தார். அகச்சிவப்பு கதிர்கள் வெப்பநிலைக் காரணமாக இருக்கும் மின்காந்த அலையாக கருதப்படுகிறது.
பூமிக்கு சூரியனிலிருந்து வரும் மொத்த கதிர்வீச்சில் பாதிக்கும் மேல் அகச்சிவப்ப கதிர்களாகும். அவைகளை நாம் கண்களால் காண இயலாவிட்டாலும், வெப்பத்தின் மூலம் உணரலாம். அகச்சிவப்பு கதிர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அன்னிய அகச்சிவப்பு (Near IR), மத்திய அகச்சிவப்பு (Mid IR), தூர அகச்சிவப்பு (Far IR) அகச்சிவப்பு நிறமாலை மூலம் மூலக்கூறுகளில் உள்ள வினைபடு தொகுதிகளைக் கண்டறியலாம். மனித உடலிலிருந்து வெளியிடப்படும் அகச்சிவப்பு கதிர்களின் அளவு – 1/10 மி.மீலிருந்து 1/100 மி.மீ ஆகும். பாம்புகள் இரவில் தனது இரையைத் தேட அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்துகிறது எனவும், அகச்சிவப்பு கதிர்களின் பயன்களை பின்வருமாறும் எடுத்துக் கூறினார்.
பயன்கள்
• காற்று மூடுபணி இவற்றை கடந்து படம் எடுக்கவும் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் தசைகளிலும் எலும்பு இணைப்புகளிலும் ஏற்படும் வலியை நீக்கவும் மூலக்கூறு வடிவமைப்பை கண்டறியவும் அகச்சிவப்பு கதிர்கள் பயன்படுகிறது.
• பெயிண்ட் பூச்சுக்களை குறைந்த நேரத்தில் உலர வைக்கவும் புவியிலுள்ள நீல முகங்களை கண்டறியவும் செயற்கை கோள்களிலிருந்து புவியின் வானிலையை படம் பிடிக்கவும் நோய்வாய்ப்பட்ட பயிர்களை கண்டறியவும் அகச்சிவப்பு கதிர்கள் பயன்படுகின்றன. இறுதியில் மாணாக்கர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வேதியியல் துறைத்தலைவர் முனைவர் சி.முத்துக்குமார் தலைமை தாங்கினார். முதுநிலை முதலாமாண்டு மாணவன் M.அனந்து வரவேற்புரையும், முதுநிலை இரண்டாமாண்டு மாணவி K.V.அர்ச்சனா நன்றியுரையும் கூறினார்.