கரோனா தொற்றுநோய் தடுப்புப் பணிக்களுக்கான பாரத பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு லட்சத்தை வழங்கியது.






புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) 04.04.2020 அன்று கரோனா தொற்றுநோய் தடுப்புப் பணிக்களுக்கான பாரத பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு லட்சத்தை வழங்கியது.

கரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனை எதிர்க்கும் பணியை இந்திய தேசம் மிக சாதுர்யமாய் பல்வேறு செயல்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அரசின் இப்பணிக்கு துணைநிற்பதில் ஒவ்வொரு மனிதருக்கும் பங்கு உண்டு என்பதை அனைவரும் பலவழிகளில் செயல்படுத்தி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரியின் ஆசிரியர்கள், பணியாளர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை கரோனா தொற்றுநோய் தடுப்புப் பணிக்கான பாரத பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்துள்ளனர். எனவே, ஆசிரியர், பணியாளர்கள் ஊதியத்தையும், நிர்வாகத்தின் பங்களிப்பையும் இணைத்து ரூபாய் ஒரு லட்சத்திற்கான தொகையை வங்கி மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டது என அக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் தனது அறிக்கையில் கூறினார்.