"கெம்ஃபெஸ்ட்" போட்டிகளில் முதலிடம்






திருச்சிராப்பள்ளி, ஹோலிகிராஸ் கல்லூரி, வேதியியல் துறையின் சார்பாக "கெம்ஃபெஸ்ட்" என்ற துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது. இதில் புகைப்படம் எடுத்தல், டம்சரட்ஸ், அட்ஷாப், போஸ்டர் பிரசன்டேஷன், ரங்கோலி, கெம் கனெக்சன், மற்றும் கெம் கார்டூனிங் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இதில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த சுமார் 13 கல்லூரிகளில் இருந்து, சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் புதுக்கோட்டை, ஜெ.ஜெ.கலை, அறிவியல் கல்லூரி, முதுநிலை இரண்டாம் ஆண்டு வேதியியல் மாணவ, மாணவிகள் சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் திரு.G.சபரீஷ் என்ற மாணவன் புகைப்படம் எடுத்தலில் முதல் பரிசும், திரு.R.அஜித் பிரசாத், திரு.PR.தீனதயாளன் மற்றும் திரு.V.அருண்குமார் ஆகியோர் கெம் கனெக்சன் என்ற போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றனர். பரிசு பெற்ற வேதியல் துறை மாணாக்கர்களை, கல்லூரி செயலாளர் திரு.ந.சுப்பிரமணியன், கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் முனைவர்.கவிதா சுப்பிரமணியன், முதல்வர் முனைவர்.ஜ.பரசுராமன் மற்றும் துறைத்தலைவர் முனைவர்.சி.முத்துக்குமார் ஆகியோர் பாராட்டி, ஊக்கப்படுத்தி மகிழ்ந்தனர்.