பல்கலைக்கழக கிரிக்கெட் போட்டி






பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் இரண்டு பிரிவுகளாக (தஞ்சாவூர் மற்றும் திருச்சி) பிரிக்கப்பட்டு நடைபெற்றன.

தஞ்சாவூர் பிரிவில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மாயவரம், நாகப்பட்டிணம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி போன்ற நகரங்களிலுள்ள 20-க்கும் மேற்பட்ட கல்லூரி அணியினர் பங்குபெற்றனர்.

இவற்றில் முதல் இரண்டு இடம் பிடித்த புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி மற்றும் திருவாரூர் திரு.வி.க.கல்லூரி அணியினர் தகுதி பெற்றனர்.

திருச்சியிலிருந்து நேஷனல் கல்லூரி மற்றும் புனித வளனார் கல்லூரி அணியினரும் தகுதி பெற்றனர்.

இதற்கான லீக் போட்டிகள் தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரியில் 25.01.2023 முதல் 27.01.2023 வரை நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரி அணியினர் நான்காம் இடம் பிடித்து சாதனைப் படைத்தனர்.

இவற்றில் சிறந்து விளையாடி விளையாட்டு வீரர்கள் தேர்வு நடைபெற்று அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்காக தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையோன போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

போட்டியில் வென்ற மாணவர்களை கல்லூரி செயலர் நா.சுப்பிரமணியன், முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் மற்றும் உடற்கல்வித்துறை தலைவர் முனைவர் மு.ஜெகதீஸ் பாபு பாராட்டினார்.